விஜயகாலவின் பதவியை பறிக்க வேண்டும்! கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு!

0
437

விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என விஜயகலா தெரிவித்த கருத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் கருத்து கூறியுள்ளார். Revoke vijayakala position naveen dissanayake Said UNP Meeting

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே நவீன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites