உடம்பில் மறைத்து வைத்து ஹெரோயின் கடத்தல் ; ஹட்டன் பஸ்ஸில் சம்பவம்

0
630
One person arrested 713 milligrams heroin Hatton

ஹட்டன் நகரில் 713 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். (One person arrested 713 milligrams heroin Hatton)

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் இருந்த நபர் ஒருவரை சோதனை செய்த போது, குறித்த நபரிடம் இருந்து ஆறு சிறிய பக்கெட் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மிகவும் சூட்சபமான முறையில் உடம்பில் மறைத்து வைத்து கொண்டு வந்த போது ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் குறித்த பஸ்ஸை சோதனையிட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஹெரோயின் பக்கெட்டுக்கள் கொட்டகலை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் ஹெரோயின் பக்கெட்கள் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; One person arrested 713 milligrams heroin Hatton