மைத்திரியின் மரண தண்டனை தீர்மானத்துக்கு ஞானசாரரும் ஆதரவாம்!

0
442
Gnanasara Thero Supports Maithree Death Penalty Decision

சமூகத்தின் பாதுகாப்பு கருதி தூக்குத் தண்டனை வழங்கும் ஆவணத்தில் இறுதி ஒப்பமிட ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்க விடயமாகும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். Gnanasara Thero Supports Maithree Death Penalty Decision

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள அதிரடி தீர்மானத்தை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாற்ற முற்படக் கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரியின் மரணதண்டனை தொடர்பான தீர்மானத்துக்கு பல தரப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள போதும் சர்வதேச மன்னிப்பு சபை போன்ற சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites