திருந்தாத குற்றவாளிகளை தூக்கிலிடுவதே சிறந்தது! மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து!

0
355

குற்றவாளி சிறையில் இருந்தும் திருந்த சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளாமல், அங்கும் குற்றம் செய்வதாயின் அவரைத் தூக்கில் தொங்க விடுவதில் தவறில்லை என பேராயர் வண. காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். Death Penalty Good Smuggling Criminals Ranjith Malcolm Said

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர் ஒன்றை எமக்குக் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது என்றும், குற்றம் செய்துவிட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கும் தவறு செய்யும் சிலர் காணப்படுகின்ற நிலையில், நல்ல சமூகம் ஒன்றை உருவாக்க முடியாமல் உள்ளது.

அதேபோன்று, சிறைப்படுத்தப்பட்ட பின்னர் தனது மனதை சரிசெய்து கொண்டவர்களும் உள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் நியாயமான முடிவை எடுப்பது தவறல்ல என்றும் காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites