தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புகள்! மன்னாரில் நீடிக்கும் மர்மம்!

0
486
Mannar Human Bone Excavation Works Continue

மன்னாரில் இன்று 32 ஆவது நாளாகவும் மனித எலும்புக்கூடுகளின் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகின்றது. Mannar Human Bone Excavation Works Continue

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்த அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை 23 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதோடு மேலும் 37 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது பகுதியளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரளவிற்கு முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அகழ்வின்போது அப்புறப்படுத்தப்படும் மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்படுவதோடு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த அகழ்வுப் பணி மன்னார் நீதிவான் ரி.ஜே.பிராபாகரனின் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites