15 மற்றும் 19 வயது யுவதிகளின் கருக்கலைப்பு வீதம் இலங்கையில் அதிகரிப்பு

0
860
sri lanka news low age girl abortion increase causal hospital

(sri lanka news low age girl abortion increase causal hospital)

இலங்கையில் 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளதாக காசல் மகளீர் மருத்துவமனையின் விசேட நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

நேற்று அனுஷ்டிக்கப்பட்ட உலக சனத்தொகை தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர் லெனரோல் கருக்கலைப்புக்கள் புள்ளி விபரங்களை வெளியிட்டார்.

இலங்கையில் நாளொன்றின் சராசரியாக ஆயிரம் கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

கருக்கலைப்பு செய்யும் பெண்களை ஆராய்ந்தால், 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகளுக்கிடையில் கருக்கலைப்பு சதவீதம் அதிகரித்துள்ளது.

பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளை பெறுவதும் பிரச்சினைக்குரிய விடயமாகும்.

இதற்காக அரசாங்கம் கூடுதலான தொகையை செலவிட நேர்ந்துள்ளது.

குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சிறப்பு நிபுணர் டொக்டர் சஞ்சீவ கொடகந்த கருத்து வெளியிடுகையில், குடும்பத் திட்டமிடல் மூலம் அநாவசிய கர்ப்பங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் சனத்தொகையும் சடுதியாக அதிகரிப்பதால் குடும்பக் கட்டுப்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக குடும்பத் திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு நிபுணர் கீதாஞ்சலி மாபிற்றிகம குறிப்பிட்டார்.

(sri lanka news low age girl abortion increase causal hospital)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites