இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை நகலின் சிங்களப் பிரதி நாடாளுமன்றத்திற்கு – அப்போ தமிழ் பிரதி எங்கே??

0
605
Sinhalese copy Free Trade Agreement Sri Lanka Singapore

(Sinhalese copy Free Trade Agreement Sri Lanka Singapore)

இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான நகலின் சிங்களப் பிரதி அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன் ஆங்கிலப் பிரதி 1,200 பக்கங்களை தாண்டியுள்ளது.

இதன் காரணமாக சிங்களப் பிரதி அதைவிட கூடுதலான பக்கங்களை கொண்டிருக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக சர்வதேச வணிக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சு அறிவித்துள்ளது.

உடன்படிக்கையின் உள்ளடக்கம் பற்றிய சரியான தகவல்கள் முறையாக தொடர்பாடப்படவில்லை என்பதன் காரணமமாக மொழிப் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விரைவில் சிங்களப் பிரதியை வழங்குவது பற்றி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழ் பிரதி பற்றி இங்கு கவனம் செலுத்தப்படாமை சுட்டிக்காட்டத்தக்கது.

(Sinhalese copy Free Trade Agreement Sri Lanka Singapore)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites