சென்னைக்கு கடத்தப்பட்ட ஐந்தரை கோடி பெறுமதியான தங்கம் பறிமுதல்

0
603
Gold seized Sri Lanka Chennai smuggling 5 crore serious

(Gold seized Sri Lanka Chennai smuggling 5 crore serious)

இலங்கையிலிருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை, கோயம்பத்தூர், தூத்துக்குடியை சேர்ந்த மத்திய வருமானதுறை புலானாய்வு பிரிவினர் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை – பூதக்குடி, சுங்கச்சாவடி அருகே சென்ற தனியார் பேரூந்தில் இருந்தே குறித்த தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பேரூந்தை நிறுத்தி சோதனையிட்ட தருணத்தில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரத்தை சேர்ந்த இருவர் கடத்தி சென்ற 17.83 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் 16 கிலோ சுத்த தங்கம் எனவும் 1.83 கிலோ உலோக கலப்படமுள்ள தங்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் தொடர்பாக சென்னை, மண்ணடியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Gold seized Sri Lanka Chennai smuggling 5 crore serious)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites