வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ராணுவம் நிலைகொண்டுதான் இருக்கிறது – சட்ட ஒழுங்கு உரிய முறையில் முன்னெடுக்கப்படும் (Video)

0
534
appropriate measures taken carry legal disciplinary action Jaffna District

(appropriate measures taken carry legal disciplinary action Jaffna District)

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் இன்று (12) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திற்கு பிரதியமைச்சரும், பொலிஸ் மா அதிபரும் விஜயம் செய்திருந்தனர்.

இங்கு வந்து மக்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். யுத்தத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் மக்கள் அபிவிருத்தியும் சமாதானத்துடனும் வாழ்வதைக் காணக்கூயதாக உள்ளது.

விசேடமாக சட்ட ஒழுங்கு அமைச்சின் கீழுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை வழிப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அபிவிருத்தியின் ஊடாக மக்களுக்கு பொருளாதாரம் உயர்ந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கமும், சட்ட ஒழுங்கு அமைச்சும் சரியான சேவைகளைச் செய்கின்றார்கள்.

அரச முகாமைத்துவ நிர்வாக அமைச்சும் அனைத்து மக்களுக்கும் அனைத்து சேவைகளையும் வழங்குகின்றோம்.

பொலிஸ் சேவைக்குள் 1,500 சமுர்த்தி உத்தியோதர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பினையும் வழங்கவுள்ளோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிராமங்கள் தோறும் கிராமத்தினை ஊக்குவிக்க வேண்டும் எனும் வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளின் படி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்குப் பொலிஸ் உள்ளிட்ட பல தரப்பினருடனும் கலந்துரையாடி நடவடிக்கைகள் முன்னெடுப்போம்.

இதன்போது, யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கலாசாரங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், வாள்வெட்டு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான வாள்வெட்டு மற்றும் சமூக சீர்கேடான செயல்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பான தகவல்களை பொது மக்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

பொது மக்களின் தகவல்களின் பிரகாரமே எமது செயற்பாட்டினை மேலும் முன்னெடுக்க முடியும்.

ஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது அந்த சம்பவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

கடந்த காலங்களில் 12 லட்சத்து 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்காரகளை கைது செய்து வருகின்றனர் என அறிந்துள்ளேன்.

நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை செய்து நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீண்டும் போதைப்பொருள் விற்பனை செய்து கைது செய்தால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறான சம்பவங்களின் பின்னர், வடக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாக்க வேண்டுமென தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன என மீண்டும் கேள்வி எழுப்பிய போது, செய்தியின் பின்னர் வடக்கிலும் தெற்கிலும் இருந்து, எதிராகவும் சார்பாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

(appropriate measures taken carry legal disciplinary action Jaffna District)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites