கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலைய டென்டரை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

0
455
tamilnews kerawalapitiya power station china project case

(tamilnews kerawalapitiya power station china project case)

கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள எல்.என்.ஜி. மின்னுற்பத்தி நிலையத்தை செயற்படுத்துவதற்கு குறைந்த செலவினங்களை முன்வைத்த உள்நாட்டு நிறுவனங்களை தவிர்த்து சீன நிறுவனத்திற்கு வழங்கியதால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகள் தொடர்பான தேசிய அமைப்பினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் இடம்பெறும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு நிறுவனம் ஒரு அலகு மின்சாரத்திற்கு 14.98 ரூபா கட்டணத்தை அறிவிருந்த போதும், சீன நிறுவனம் ஒரு அலகுக்கு 15.97 ரூபாவை கட்டணமாக அறிவித்து டென்டரை கோரியிருந்தது.

இந்தநிலையில், சீன நிறுவனத்திற்கு ஓப்பந்தந்தை வழங்கினால் எதிர்வரும் 20 வருடங்களில் நாட்டுக்கு 5000 கோடிகள் நட்டம் ஏற்படும் எனவும், அதனை நாட்டு மக்களே ஏற்க வேண்டும் என குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(tamilnews kerawalapitiya power station china project case)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites