போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த முப்படையும் களத்தில்! விசேட அதிகாரங்கள் அமுல்!

0
457

முப்படைகளின் நேரடி பங்களிப்புடன் நாட்டில் தற்போது அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. President Maithri Decided Utilize Arm Forces Control Drugs

நாட்டில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையானது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஒருபுறத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இதனால் ஏற்படும் விளைவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையானது மக்களிடையே பாரிய அச்சத்தையும் அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட இணை அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து முப்படையின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான விசேட ஒழுங்குவிதிகள் தொடர்பான திருத்தச் சட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட இணை அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பணியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக, முப்படையினருக்கு சட்டமா அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்ட சில அதிகாரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை