யாழில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு, கொள்ளை, துஸ்பிரயோகங்கள் தொடர்பில் சட்ட ஒழுங்கு துறையினர் பேச்சு

0
576
tamilnews jaffna meeting security ministers Reginald kure

tamilnews (jaffna meeting security ministers Reginald kure)

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று இரவு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவரது செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதி அமைச்சர் நளின் பண்டார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வாள்வெட்டு, கொள்ளை,துஸ்பிரயோகங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இதனைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

tamilnews (jaffna meeting security ministers Reginald kure)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites