மஞ்சள் நிற recycling bin-களுக்கு பதிலாக புதிய தொட்டிகள்?

0
816

நமது வீட்டில் recycling எனப்படும் மீள்சுழற்சிக்குள்ளாக்கக்கூடிய கழிவுகளைப் போடுவதற்காக பயன்படுத்தும் மஞ்சள் நிற recycling bin-களை இல்லாதொழித்துவிட்டு அதற்குப் பதிலாக புதிய 4 வகை container-கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Boomerang Alliance என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு இப்பரிந்துரையை முன்வைத்துள்ளது.

மஞ்சள் recycling bin-களை நீண்டநாட்களாகப் பயன்படுத்திவரும் மக்கள் அதற்குள் போடப்படும் பொருட்கள் தொடர்பில் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிவித்துள்ள இக்குழு ஆஸ்திரேலியாவின் மீள்சுழற்சி செயற்பாட்டின் தரத்தை இதன்மூலம் உயர்த்தமுடியும் என கூறியுள்ளது.

இதன்படி பேப்பர் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், இயற்கை கழிவுகள், கண்ணாடிப்பொருட்கள் ஆகிய 4 விதமான கழிவுகளுக்கென பிரத்தியேகமான 4 container–களை வழங்குவது சிறந்தது என Boomerang Alliance பரிந்துரைத்துள்ளது.

ஜேர்மனி நாட்டில் இம்முறை வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டுவருவதை இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.