புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவியேற்பு!

0
408

நேற்று இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். President Maithripala Sirisena Appoints Two New Ministers

பிரதி அமைச்சராக இருந்த ஜே.சி.அலவத்துவல உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த லக்கி ஜெயவர்த்தன நகர அபிவிருத்தி, நீர் விநியோக இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகிய விஜயகலா மகேஸ்வரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகியிருந்தார்.

அவரது அமைச்சுப் பதவி இன்னமும் எவருக்கும் கொடுக்கப்படாத அதேவேளை, பிரதி அமைச்சராக இருந்த ஒருவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை