கடனட்டை மோசடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு! பெண் ஒருவருக்கு கிடைத்த அதிர்ச்சி அனுபவம்!

0
534

இணைய வழி மோசடிகள் யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் இணைய வழி மோசடிகள் குறித்து கடந்த மாதம் மாத்திரம் இரண்டு முறைப்படுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். Credit Card Fraud Increases Jaffna District Police Informed

யாழில் உள்ள உறவு முறையான பெண் ஒருவரின் கடனட்டை குறியீட்டு இலக்கத்தை பயன்படுத்தி, இணையம் மூலம் மின்னியல் சாதனங்களை நபர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த நபரின் செயற்பாட்டால் கடனட்டை வங்கிக் கணக்கில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிலுவையை செலுத்தவேண்டியுள்ளது என வங்கியால் அந்தப் பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த பெண், வங்கிக்குச் சென்று ஆராய்ந்த போது, இணைய வழி ஊடாக கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டமை அறியக் கிடைத்ததுள்ளதுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், எதிர்வரும் 13ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை