காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

0
376
Vijays latest still viral Sarkar movie,Vijays latest still viral Sarkar,Vijays latest still viral,Vijays latest still,Vijays latest

விஜய் நடித்து வரும் “சர்கார்” படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.(Vijays latest still viral Sarkar movie)

இந் நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ”சர்கார்” படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் வைத்து கையில் குடையுடன், காதில் கடுக்கனுடன் நிற்கும் விஜய்யின் புகைப்படம் ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

இப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றது. மேலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப் படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Vijays latest still viral Sarkar movie

Our Other Sites News :-

அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியில்லை!