பொலிஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு : இரத்தினபுரியில் பதற்றம்…

0
834
Policeman strangled death Buddhist monk news Tamil

இரத்தினபுரி – கலெந்த பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றுக்கு கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். Policeman strangled death Buddhist monk news Tamil

இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறிய புகார் பிரிவில் சேவை புரிந்து வந்த பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலெந்த பௌத்த விகாரையில் உள்ள பிக்குவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது. இதுதொடர்பில் விசாரணை செய்ய பொலிஸ் அதிகாரி குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த பிக்கு பொலிஸ் அதிகாரியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவதற்கு இடையில் உயரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.பி.ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பிக்குவை கைது செய்வதற்கு இரத்தினபுரி பொலிஸ் தலைமை அதிகாரி குறித்த இடத்துக்கு சென்ற போது பிக்கு, அவர் மீது கைக்குண்டு ஒன்றையும் வீச முற்பட்டுள்ளார்.

எனினும் பிக்குவை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Policeman strangled death Buddhist monk news Tamil, Policeman strangled death Buddhist monk news Tamil