காவல்துறை பேச்சாளரின் செயற்பாடு மனித உரிமை மீறலாகும் – சுசில் பிரேம்ஜயந்த் சாடல்

0
327
tamilnews police overtaking human rights killed people

(tamilnews police overtaking human rights killed people)
படுகொலைச் சம்பவம் ஒன்றின் போது கொலை செய்யப்பட்டவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும், அவருடைய பழைய குற்றங்கள் தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிடுவதால் அவர் கொலை செய்யப்பட்டமையானது சரியானதே என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுசிர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் கொட்டாஞ்சேனை பகுதியில் கணவனும் மனைவியும் துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

அதேவேளை, நேற்று காலை செட்டியார் தெருவில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து சுயேற்ட்சையாக போட்டியிட்டு கொழும்பு மாநகர சபைக்கு தெரிவான உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவ்வாறான சூழ்நிலையில் அவர்களின் பிண்ணனியில் உள்ள தகவல்களையும், குற்றங்களையும் வெளியிடுவதன் காரணமாக இறந்தவர்களின் சுயகௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

அதை விடுத்து பொலிஸார் சட்டத்தை முறையாக கையாண்டு இடம்பெற்றுள்ள அசம்பாவிதம் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தினார்.

கொலை சம்பவங்களின் போது பொலிஸார் இவ்வாறு நடந்துகொள்ளாது சட்டங்கள் மீறப்படும் போது குற்றங்கள் ஏற்படாத வண்ணம் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதனால் மனித உரிமை மீறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

(tamilnews police overtaking human rights killed people)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites