நீரிழிவு கால் புண் – தடுக்கும் முறைகள்!

0
1143
Diabetic Foot Sore Preventing Methods

{Diabetic Foot Sore Preventing Methods}

நீரிழிவு நோயாளிகளுக்கு கால் புண் ஏற்படுவதற்கான காரணிகள் எவை?

  • கால் நரம்புகளின் செயற்பாடு குறைவடைந்து தொடுகை மற்றும் நோவு போன்ற உணர்ச்சிகளற்றுக் காலில் விறைப்புத்தன்மை ஏற்படல்.
  • கால்களுக்கான குருதி ஓட்டம் நலிவடைதல்.
  • நீரிழிவு கட்டுப்பாடு குறைவடைதலும் குருதியில் சீனியின் அளவு அதிகரித்தலும்.
    கிருமித் தொற்றுக்கள் ஏற்படல்.
  • பாதம் மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் ஏற்படும் தோல் தடிப்புத் தன்மை, தொப்புளங்கள் மற்றும் கண்டல் காயங்கள்.
  • கால் விரல்களுக்கிடையில் ஏற்படும் கிருமித் தாக்கம்.
  • கால் விரல் நகக்கணுக்களில் ஏற்படும் கிருமித்தாக்கம்.
  • பாதம் மற்றும் கீழ்க் கால்களில் ஏற்படும் வெட்டுக் காயங்களும் கீறல் காயங்களும்.
  • பிராணிகள், பூச்சிகளால் காலில் ஏற்படும் கடி மற் றும் குத்துக் காயங்கள்.

நீரிழிவு கால் புண்ணின் அபாயம் எத்தகையது?

  • மேற்குறிப்பிட்ட காரணிகளால் பாதிக்கப்பட்ட காலின் பகுதியில் கிருமித்தாக்கம் ஏற்படுவதால் பாதம் சிவந்து வீக்கமடைந்து உஷ்ணமாக இருத்தல்.
  • குறிப்பிட்டகாலின் பகுதி கறுப்பு நிறமாகி சீழ்படிதல்.
  • பாதம் மற்றும் கால்களில் துர்நாற்றம் வீசுவதுடன் புண்கள் உருவாதல்.
  • பாதத்தின் என்புகள் கிருமித் தொற்றுக்குள்ளாகுதலும் விரல் மற்றும் பாதம் அழுகிப்போதலும்.
  • நீரிழிவு கால் புண் உங்களை அங்கவீனர்களாக்கலாம்பாதிக்கப்பட்ட கால்விரல்கள் வெட்டி அகற்றப்பட வேண்டி வரலாம்.
  • முன்பாதங்கள் வெட்டியகற்றப்பட வேண்டி வரலாம்.
  • முழங்காலுக்குக் கீழாகக் கால் வெட்டியகற்றப்படலாம்.
  • முழங்காலுக்கு மேலாகக் கால் வெட்டியகற்றப்பட வேண்டி வரலாம்.

நீரிழிவு கால் புண் காரணமாக ஏற்படும் அங்கவீனங்களைத் தடுக்கும் முறைகள் எவையெவை?

  • கால் மற்றும் பாதங்களைத் தினமும் கழுவிச் சுத்தமாக வைத்திருத்தல்.
  • தினமும் கால்விரல்களுக்கு இடையில் ஈரலிப்பின்றிப் பேணுதல்.
  • தினமும் கால்விரல்கள், விரல் ஈறுகள், பாதம் மற்றும் கால்களின் கால்புண் ஏற்படக்கூடிய காரணிகள் பற்றி அவதானித்தல். இதற்குக் குடும்ப உறுப் பினர்கள் உதவுதல் அவசியம்.
  • தொழில் செய்யும் இடங்களிலும் வீதியிலும் நடக்கும்போது பாதணிகள் அணிதல்.
  • இறுக்கமான மற்றும் மிகவும் தொய்ந்து பழுதான காலணிகளைத் தவிர்த்தல்.
  • கால்விரல் நகங்கள் மட்டமாக வெட்டப்படுதல்.
  • பாதத்தில் ஏற்படும் தோல் தடிப்புகள் மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும். இவற்றை நோயாளி வெட்டியகற்ற முற்படக் கூடாது.
  • பாதம் மற்றும் காலில் ஏற்படும் காயங்களுக்கு (சிறிய காயங்கள் உட்பட) உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் தாமதப்படுத்தலும் நாட்டு வைத்தியம் செய்தலும் கண்டிப்பாகத் தவிர்க்கப் பட வேண்டும்.
  • நீரிழிவுக்குப் பாவிக்கும் மருந்துகளைத் தவறாது உபயோகித்து குருதியில் சீனியின் அளவைப் பேணுதல்.
  • புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்.

மருத்துவர்.எஸ்.ராஜேந்திரா
அறுவைச் சிகிச்சை நிபுணர்,

Tags: Diabetic Foot Sore Preventing Methods

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

*காலையில் ஏன் வெந்நீர் குடிக்க வேண்டும்?

*கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்!

*இரவில் படுக்கும் முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்!

*கிரீன் டீயை யாரெல்லாம் குடிக்கலாம்!

*இந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளிக்கக்கூடாது!

*பிரசவ தழும்பை மறைக்கும் இயற்கை வைத்தியம்!

*சீரகத்தை பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/