(WorldCup 2018 FifaWorldCup 2018 BRABEL BELBRA Brazil vs Belgium)
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து பெல்ஜிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
பிஃப்பா கால்பந்து திருவிழா ரஷியாவில் இடம்பெற்று வருகின்றது. லீக், நாக் அவுட் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் – பெல்ஜியம் அணிகள் களமிறங்கின.
ஆரம்பம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் ஆட்டத்தின் 13 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
வாய்ப்புகளை தவறவிட்ட பிரேசில்
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோலாக மாற்றவில்லை.
10 கோல்களுக்கும் மேலாக அந்த அணி வாய்ப்புகளை தவறவிட்டு முன்னேற முடியாமல் தவித்தது.
ஆனாலும், ஆட்டத்தின் 76 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் பிரேசில் பின்தங்கியது.
ஆட்டத்தின் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
பிரேசில் கடந்து வந்த பாதை
இந்த உலகக் கோப்பையில், பிரேசில் 3 ல் இரண்டு வெற்றி, ஒரு சமநிலை போட்டியுடன் முதலிடத்தைப் பிடித்தது. முதல் ஆட்டத்தில் குட்டி அணியான சுவிட்சர்லாந்துடன் 1-1 என சமநிலை செய்தது,
கோஸ்டாரிகாவை 2-0, செர்பியாவை 2-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 2-0 என மெக்சிகோவை வென்றது.
5 முறை சாம்பியனான பிரேசில் 16வது முறையாக காலிறுதியில் விளையாடுகிறது. இதுவரை 10 முறை அரை இறுதிக்கு நுழைந்துள்ளது.
பெல்ஜியம் கடந்து வந்த பாதை
இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது. பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்தை 1-0 என வென்றது.
நாக் அவுட் சுற்றில் 3-2 என ஜப்பானை வென்றது. தற்போது 13வது உலகக் கோப்பைகளில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது.
கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்து அசத்தியது.
(WorldCup 2018 FifaWorldCup 2018 BRABEL BELBRA Brazil vs Belgium)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கணவனைப் பிரிந்த பெண் பேஸ்புக் கள்ளத் தொடர்பால் கொலையுண்ட சோகம்!
- ஜெயலலிதா டாக்டரின் வாக்குமூலத்தால் அவரது மரணம் குறித்து சந்தேகம்
- அரசியலமைப்பை மீறினாரா விஜயகலா? : சட்ட ஆய்வு இதோ..!
- இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறும் இந்திய அணியின் முக்கிய வீரர்
- நவாஸ் சரீபிற்கு 10 ஆண்டுகள் சிறை; மகளுக்கு 7 ஆண்டுகள் சிறை
- அமெரிக்காவில் இன்று முதல் அமுலுக்கு வரும் சீன பொருட்களுக்கான வரி அதிகரிப்பு
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- 225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா
- விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்