மைத்திரிபால சிறிசேனவுக்கு புதிய செயலாளர் நியமனம்!

0
184
president maithripala sirisena announce no increment salary ministers

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். President Maithripala sirisena appointed new secretary

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

களனி பல்கலைக்கழத்தின் பட்டதாரியான உதய ஆர். செனவிரத்ன, அந்த பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பு துறை தொடர்பான பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவர் முன்னதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களின் செயலாளராக செயற்பட்டிருந்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites