மகளின் ஆடைகளை களைய முயற்சித்தவரை தாக்கியமைக்காக உயிரை பறிகொடுத்த தந்தை

0
361
tamilnews sujeewa involved five cases including rape female

(tamilnews anuradapura sujeeewa murder daughter abuse)
அநுராதபுரம் தீபானி வித்தியாலத்தியத்திற்கு முன்பாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தனது மகளை மானபங்கப்படுத்த முயன்ற ஒருவரை தாக்கியமைக்காக பலிவாங்கும் முகமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் வன்னியக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 45 வயதான சுஜிவ பிரசன்ன ஹெட்டியாராச்சி என்பரே சம்பவத்தில் பலியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமண நிகழ்வொன்றில் சுஜீவவின் புதல்வன் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுப்பதற்கு சுஜீவவின் புதல்வியொருவர் முயன்றுள்ளார்.

அந்த தருணத்தில் குறித்த இளைஞர் புதல்வியின் ஆடைகளை களைய முயற்சித்த நிலையில், அந்த இளைஞரை சுஜீவ கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்தநிலையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் சுஜீவவின் வாகன திருத்துமிடத்திற்கு சென்ற ஒருவர் தனது வாகனம் பழுதடைந்துவிட்டதாக தெரிவித்து தீபானி மகாவித்தியாலயத்திற்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த இடத்திற்கு சென்ற போது 4 பேர் கொண்ட குழு கூரிய ஆயுதங்களால் சுஜீவ மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

திருமண நிகழ்வின் போது தன்னை மானபங்கப்படுத்திய குழுவினரே தனது தந்தையை கொலைசெய்திருப்பதாக சுஜீவவின் புதல்வி தெரிவித்துள்ளார்.

சுஜீவவின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக மரண விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்ட போது அவர்கள் இன்னமும் தலைமறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(tamilnews anuradapura sujeeewa murder daughter abuse)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites