ஊடகங்களிடம் ஹீரோவாகிய ரஞ்சன் செய்தது முழுத்துரோகம் – விஜயகலா ஆவேசம்

0
119
state minister wijayakala maheshwaran interview Sinhalese news paper

(tamilnews ranjan ramanayaka made Total betrayal vijayakala angry)

தன்னிடம் மிக அன்னியோன்னியமாக பேசி ஊடகங்கள் மத்தியில் தன்னை ஹீரோவாக காட்டிக் கொண்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது முழுத் துரோகம் என விஜயகலா மகேஸ்வரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு தென்னிலங்கை அரசியலில் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பின.

இந்த நிலையில் விஐயகலாவின் கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க தாம் நடத்திய ஊடக சந்திப்பின் போது விஜயகலாவுடன் தொலைபேசியில் மிக நட்பு பாராட்டி பேசி அதனை ஊடகங்களுக்கு நேரலையில் விட்டிருந்தார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கான நேர்காணலை விஐயகலா வழங்கியிருந்தார்.

அதன் போது, நடந்த உரையாடல் –

கேள்வி- ரஞ்சன் ராமநாயக்க ஊடக சந்திப்பை நடத்தி உங்களுடன் தொலைபேசியில் பேசும் போது அதனை ஒலிபெருக்கில் (அவுட்ஸ்பீக்கரில்) ஊடகங்களுக்கு வழங்கிக்கொண்டிருப்பது தெரியுமா?

பதில் – அவர் எனது உரையாடலை ஊடகங்களுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை.

நான் இன்று பிரச்சினைகள் முடிந்த பின் டான் தொலைக்காட்சிக்கு நேரடியாக வந்துள்ளேன் ஊடகங்கள் ஊடாகவே எமது பிரச்சினையை வெளியில் கொண்டு வரமுடிந்துள்ளது.

அதற்காக ரஞ்சன் ராமநாயக்க ஊடகத்திற்கு முந்திக் கொண்டு வெளிக்கொணர அவசரம் இல்லை.

அவர் பாராளுமன்றத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில் சிநேகித அடிப்படையில் அவர் அழைத்த தொலைபேசி அழைப்பினை செவிமடுத்திருந்தேன்.

அந்த தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் எனக்கு தெரியாது. இவர் நேரடியாக ஊடகங்களின் ஊடாக இருந்து கொண்டு தொலைபேசியை அவட்ஸ்பீக்கரில் வைத்து கதைப்பது தெரியாது.

அவர் வைத்த பின் எனக்கு வந்த அழைப்பின் ஊடாகவே கேட்டறிந்தேன். பின்னர் நான் அந்த வீடியோ பதிவினை பார்த்திருந்தேன் இது உண்மையிலேய எனது சிறப்புரிமையை மீறல்.

இவர் ஒரு பெண்ணை துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எப்படி துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது.

இப்படியானவர்கள் தான் இந்த பாராளுமன்றில் இருக்கிறார்கள் இப்படியானவர்களின் கருத்தை எப்படி நாடாளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் செவிமடுக்க முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினராகிய ரஞ்சன் ராமநாயக்க முற்றுமுழுதாக நூற்றுக்கு 52 வீதமாக பெண்கள் வாழுகின்ற இடத்திலேயே துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே நான் உண்மையில் வெளியில் கொண்டு வரவிரும்புகின்றேன்.

இதற்கான நடவடிக்கையை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்து எனது சிறப்புரிமை மீறல் பற்றி நியாயத்த கோரவேன்.

அதேவேளை, கணவனை இழந்து தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் வேளைகளில் என்னுடைய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகத்தான் அது இருக்கின்றது. அதை நான் உரிய இடங்களுக்கு சமர்ப்பிப்பேன். என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

(tamilnews ranjan ramanayaka made Total betrayal vijayakala angry)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites