நாட்டையே உலுக்கிய படுகொலைகள் தொடர்பில் வெளியான புதுத்தகவல்கள்

0
447
S.F. Banda Murder Revelation

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ். எப். பண்டா என்றழைக்கப்படும் டீ.எம்.சரத் பண்டார உட்பட மூவரின் கொலை தொடர்பில் பொலிஸ் விசேட படையணியைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். S.F. Banda Murder Revelation

குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிகாரிகள், சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன், பின்னர் அனுராதபுரம் நீதவான் முன் ஆஜர்படுத்தியுள்ளனர். அவரை 48 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் அனுராதபுரம் – உலுக்குலம, பொலிஸ் விசேட படையணியின் முகாமில் சேவை புரிந்து வந்துள்ளார்.

வேறொரு குற்றச்செயலுடன் தொடர்புடைய நபரொருவரிடம் நடத்திய விசாரணைகளின் போது இக்கொலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது அனுராதபுரம் பொலிஸில் உயர் பதவி வகித்த அதிகாரி ஒருவர் உட்பட பாதுகாப்பு பிரிவின் சிலர் மற்றும் நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் இக்கொலையில் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதேபோல் இக்கொலைச் சந்தேகநபர்கள் , கொள்ளைச்சம்பவமொன்றுடனு தொடர்புபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு எப்ரல் 30 ஆம் திகதி, எஸ்.எப் பண்டா உட்பட மூன்று பேர் மோட்டார் வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருக்கும்போது , அனுராதபுரம் , திரப்பன, குருவில பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.