தாய் செய்யும் வேலையா இது? கராப்பிட்டிய வைத்தியசாலையில் சம்பவம்

0
185
26 year old woman arrested Incident Karpitiya hospital

காலி கராப்பிட்டிய வைத்தியசாலை கழிவறைக்குள் ஹெரோயின் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்ட தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (26 year old woman arrested Incident Karpitiya hospital)

குறித்த தாய் தனது ஆறு மாதமேயான குழந்தையை காலி, கராப்பிடிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.

குறித்த பெண்ணின் குழந்தை நிவ்மோனியா நோயினால் பாதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் கராப்பிடிய வைத்தியசாலைக்கு மாற்றிய பின்னர், குழந்தையின் தாயார் வைத்தியசாலையின் பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார்.

குறித்த தாயின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஏனைய தாய்மார்கள், இவரது நடிவடிக்கையை அவதானித்துள்ளனர்.

இதன்போது, குறித்த தாய் கழிவறையில் ஹெரொயின் பாவிப்பதை கண்டு, வைத்தியசாலையிலுள்ள பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த தாயை கைதுசெய்து வினவிய போது வைத்தியசாலைக்கு வரும்போதே போதை பொருளையும் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவரை காலி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, காலி பிரதான நீதவான் இவரை கடுமையாக எச்சரித்ததுடன், 5000 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டமை பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர் என்றும் இவரது கணவன் தொழிலுக்காக வெளிநாட்டிற்கு சென்றுதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 26 year old woman arrested Incident Karpitiya hospital