யாழ். குடாநாட்டிற்கு மன்னார் வவுனியாவில் இருந்து பொலிஸார் குவிப்பு; அச்சத்தில் மக்கள்

0
199
large number police concentrated Jaffna

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக பொலிஸார் யாழ்ப்பாணத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். (large number police concentrated Jaffna)

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்செயல்களை அடுத்தே மேலதிக பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் யுத்தம் முடிவடைந்து 09 வருடங்கள் கடந்த நிலையில், 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டும் வாள்வெட்டுகள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், கொள்ளைகள் போன்ற சமூக குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

இதனால் குடாநாட்டில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், அரச தரப்பின் மீது கடும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு அரசாங்கம் தவறி விட்டதாக, தமிழ் அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பொலிஸாரின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ். குடாநாட்டில் பாதுகாப்பைப் பலப்படுத்த மேலதிக பொலிஸார் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து 100 பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நிலைமைகளை நேரில் ஆராய்வதற்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாளை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; large number police concentrated Jaffna