நவாஸ் சரீபிற்கு 10 ஆண்டுகள் சிறை; மகளுக்கு 7 ஆண்டுகள் சிறை

0
203
Nawaz Sharif convicted 10 years Imprisonment

பனாமா கேட் ஊழல் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் சரீபிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.(Nawaz Sharif convicted 10 years Imprisonment)

பனாமா கேட்’ ஊழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் சரீப்பும், அவரது குடும்பத்தினரும் சிக்கினர்.
இது தொடர்பாக அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், ஜே.ஐ.டி. என்னும் கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.

விசாரணை முடிவில் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. நவாஸ் சரிப்புக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யவும் இந்த ஊழல் வழக்கு விசாரணையை ஊழல் ஒழிப்பு நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் வெளிநாடுகளில் நவாஸ் சரிப் குடும்பத்தினர் சொத்து குவித்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கிஉள்ள நவாஸ் சரீப் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு முடக்கியது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தேசிய கணக்கீட்டுப் பணியகம் (என்ஏபி) தாக்கல் செய்த ஊழல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் சரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகன் கேப்டன் சப்தர் ஆகியோருக்கு இன்று நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது.

நவாஸ் சரீபுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைவாசம், அவரது மகள் மரியாம்க்கு குறைந்தது ஏழு ஆண்டுகள் மற்றும் சப்தர்க்கு ஒரு வருடம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Nawaz Sharif convicted 10 years Imprisonment,Nawaz Sharif convicted 10 years Imprisonment,Nawaz Sharif convicted 10 years Imprisonment,