இலங்கைக்கு தேவையானது மகிந்த சிந்தனையே, கோட்டாபயவில் வியத்மக ஆட்சியல்ல – வாசுதேவ

0
124
tamilnews sri lanka want latest mahinda chindana not gotta rule

(tamilnews sri lanka want latest mahinda chindana not gotta rule)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தை வீழ்த்தி விட்டு யாரேனும் முன்னேறிச் செல்வார்களாயின் அதற்கு இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணியால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

புதுப்பிக்கப்பட்ட மகிந்த சிந்தனையே தற்போது தேவை நாட்டுக்கு ஆனால், வியத் மக என்ற கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான அமைப்பு அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் அவருக்கு மகிந்த ராஜபக்சவே தலைமை தாங்குவார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நிகரான தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய எவரும் இல்லை எனவும் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

(tamilnews sri lanka want latest mahinda chindana not gotta rule)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites