தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த வருட இறுதியிலிருந்து கூகுல் வரைபடத்தில் மேலதிக வசதிகளை உள்ளடக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
புதிதாக இலங்கையில் வெளியிடவுள்ள கூகுல் வரைபட வசதியில் இலங்கையின் அனைத்து போக்குவரத்து தரவுகளும் உள்ளடக்கப்படவுள்ளது. இதில் மேலதிகமாக பொதுமக்களுக்கான போக்குவரத்து தொடர்பான தரவுகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
ஏற்கனவே வழித்தேடலுக்கான கூகுல் நெவிகேசன் அஃப்லிகேசன் ஏற்கனவே இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் கூகுலானது இலங்கையின் உள்ளூர் போக்குவரத்து சேவைகள் தொடர்பான தரவுகளை மக்களுக்கு வழங்கவில்லை. இந்நிலையில் குறித்த தரவுகளை எதிர்காலத்தில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புதிய கூகுல் வரைப்படத்தின் மூலம் இலங்கையில் மேம்படுத்தப்பட்ட குறுகிய வழிகளை கண்டுப்பிடிக்கப்பட்ட முடிவதுடன், செல்லக்கூடிய இடத்துக்கான பல்வேறு குறுகிய வழிகளையும் கண்டறிய முடியும். இவ்வாறான வசதிகள் அடங்கிய கூகுல் அஃப்லிகேசனை இவ்வருட இறுதியில் அனைவரும் தரவிறக்கம் செய்ய முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக மாகாணங்களுக்குள்ளான சிறிய பஸ் மார்க்கங்கள், ரயில் பாதைகள், மேல் மாகணத்தின் பஸ் மார்க்கங்கள், தென் மாகாணத்துக்கான தேசிய போக்குவரத்து மார்க்கங்கள் என்பன உள்ளடக்கப்படும்.
அத்துடன் போக்குவரத்து பொறியியல் சேவை நிபுனர் ஜி.எல். திமந்த டி சில்வா குறிப்பிடுகையில்,
புதிய கூகுல் வரைபட வசதியின் மூலம், தினமும் பரீட்சையமில்லாமல் வீதியில் வாகனம் ஓட்டும் நபர்கள், மார்க்கங்கள் தவறும் போக்குவரத்து சேவைகள், உரிய நேரத்துக்கு செல்லுமிடத்தை அடையாத போக்குவரத்து சேவைகள் என்பவற்றை கண்டறிய முடியும். அதுமாத்திரமின்றி கூகுல் வரைபடமானது ஒரு இடத்துக்கு செல்லக்கூடிய தூரம் மற்றும் நேரத்தை காட்டுகிறது. எனினும் இந்த வசதியானது பொதுமக்கள் போக்குவரத்து சேவைகளுக்கு சரியாக வழங்கப்படவில்லை. குறித்த வசதியும் புதிய கூகுல் வரைபடத்தின் மூலம் கண்டறிய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் புலிகள் கருத்து தொடர்பில் ஞானசார தேரரின் அதிரடி பேச்சு
- பிரபலம் தேடும் முயற்சியில் சிலர் என்மீது வழக்கு தொடுக்கின்றனர் – மணிவண்ணன்
- பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்
- யாழ். பொலிஸாருக்கு விடுமுறைகள் இரத்து; அரசாங்கம் அதிரடி முடிவு
- பிரபாகரன் புதுப்பிறப்பாக படைக்கப்பட்டவர் – போராட்டம் இன்னொரு உருவம் எடுத்துள்ளது
- தமிழீழ புலிகளின் முன்னாள் போராளி தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது
- ஆசிரியையின் தலையை துண்டித்து 5 கி.மீ. தூக்கிக்கொண்டு ஓடிய நபர் – நண்பகலில் கொடூரம்
- தற்காப்புக்காக என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்
- நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் – முதல்வர் உறுதி
- படுக்கைக்கு மறுத்தேன் : வாய்ப்புகளை இழந்தேன் : மல்லிகா ஷெராவத்
- பழனி கோவிலில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- மஹிந்த 100 கோடி தருவதாகக் கூறினார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயகலா
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- மகிந்தவின் தேவைக்காக விஜயகலா புலியை அழைத்திருக்கலாம்; ஐதேக
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Sri Lanka launch new Google Maps facility, Sri Lanka launch new Google Maps facility, Sri Lanka launch new Google Maps facility