“100 மில்லியன் ரூபாவை வெகுமதியாக பெற்ற இலங்கை சுங்க அதிகாரி”

0
567
Sri Lanka CUSTOMS REWARD

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் கடமைபுரியும் அதிகாரிகளில் நூற்றில் ஒருவர் வருடாந்தம் சம்பளத்துக்கு மேலதிகமாக பெரும் தொகையை வெகுமதிகளாக பெறுவதாகவும், அதன்படி 12 மாதங்களில் சுங்க அதிகாரியொருவர் சுமார் 100 மில்லியன் ரூபாவை வெகுமதியாக பெற்றுள்ளதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Sri Lanka CUSTOMS REWARD

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் 1600 பேர் வரை பணிபுரிவதாகவும், அவர்களில் 21 பேர் 400 மில்லியன் ரூபாக்களை வெகுமதியாக பெற்றுள்ளதுடன் அவர்களில் 12 பேர் ஒவ்வொரு வருடமும் அதிக வெகுமதிகளை பெற்றுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது அமுலில் உள்ள 1885 சுங்கச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டமொன்றை அமுல்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும், அதன்படி சுங்கத்திணைக்களத்தை மீள்கட்டமைப்பு செய்து , வெகுமதிகளை அனைத்து சுங்க அதிகாரிகள் இடையேயும் பிரித்து வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.