வடக்கில் பயங்கரமான நிலை : விஜயகலா கருத்து தொடர்பில் மஹிந்த

0
856
mahinda rajapaksa vijayakala maheswaran

வடக்கில் விஜயகலா கூறிய கருத்தை வேறு யாராவது கூறியிருந்தால் இந்நேரத்திற்கு அவர் கைது செய்யப்பட்டிருப்பார். நாட்டின் சட்டம் என்பது ஒன்று. கட்சியின் சட்டம் என்பது வேறு ஒன்று. கட்சியின் சட்டத்தை பாதுகாப்பதற்கு முன்னர் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(mahinda rajapaksa vijayakala maheswaran)

வடக்கில் இன்று சட்டம் இல்லை. பொலிஸார் பாதையில் இறங்கி நடமாட முடியாத பயங்கரமான நிலை காணப்படுகின்றது. தென் இந்திய திரைப்படங்களில் உள்ளவாறு அங்கு சமூகமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையை நிருவகிக்க அரசாங்கத்திலுள்ள தலைவர்களுக்கு முடியாமல் போயுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

மீண்டும் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாடுள்ள இடத்தில் நல்லிணக்கத்துக்கு இடமில்லை

இந்த நாட்டில் உண்மையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது எமது அரசாங்கம். நாம் 12500 எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்தோம். இன்று அவர்கள் பொலிஸில் சிவில் பாதுகாப்பு பிரிவில் சேவை புரிகின்றனர். உண்மையான நல்லிணக்கம் என்பது இதுவாகும்.

வடக்கில் விஜயகலா கூறிய கருத்தை வேறு யாராவது கூறியிருந்தால் இவ்வளவுக்கு அவர் கைது செய்யப்பட்டிருப்பார். நாட்டின் சட்டம் என்பது ஒன்று. கட்சியின் சட்டம் என்பது வேறு ஒன்று. கட்சியின் சட்டத்தை பாதுகாப்பதற்கு முன்னர் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்.

இதேவேளை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.
நாட்டின் நிர்வாகம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்தினரும், பொலிஸாரும், தலைவர்களும் செயற்திறன் அற்றவர்களாக இருக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mahinda rajapaksa vijayakala maheswaran,mahinda rajapaksa vijayakala maheswaran,mahinda rajapaksa vijayakala maheswaran,