இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
638
Today Horoscope 05-07-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 21ம் தேதி, ஷவ்வால் 20ம் தேதி,
5.7.18 வியாழக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி இரவு 9:06 வரை;
அதன் பின் அஷ்டமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 3:37 வரை;
அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மகம்
பொது : முகூர்த்தநாள், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

.

மேஷம்:

தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

 

ரிஷபம்:

மனச்சாட்சிப்படி நடந்து குடும்ப பெருமையை நிலைநாட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நேரும் குளறுபடியை உடனடியாக சரியசெய்வது நல்லது. லாபம் சுமார். பெண்கள் பிறர் பணம், நகை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

மிதுனம்:

எதிர்பார்ப்பு நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். எதிர் மனப்பாங்கு உள்ளவரிடம் விலகுவது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை.

கடகம்:

உங்களின் இரக்க குணம் அறிந்து சிலர் உதவி பெறுவர். இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினர் மத்தியில் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மூலதனம் அதிகம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். உடல்நலனில் கவனம் செலுத்தவும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

கன்னி:

மனதில் நேர்மை எண்ணம் மேலோங்கும். பிறருக்கு உதவி செய்ய முன்வருவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
.

துலாம்:

உங்களின் நற்செயலை சிலர்பரிகாசம் செய்து பேசுவர். எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். லாபம் சராசரி அளவில் இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு ஏற்படலாம்.

விருச்சிகம்:

நல்ல மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தாமதமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். லாபம் உயரும். குடும்ப விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

தனுசு:

மதி நுட்பத்துடன் செயல்படுவீர்கள். கடந்த கால முயற்சிக்கான நற்பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.

மகரம்:

பேச்சு, செயலில் தயக்கம் ஏற்படலாம். பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் ஆடம்பர நோக்கில் கடன் வாங்க வேண்டாம். பிராணிகளிடம் விலகியிருப்பது நல்லது.

கும்பம்:

குடும்ப பிரச்னை குறித்து பிறரிடம் பேச வேண்டாம். எதிர்பார்ப்பு ஓரளவே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பெணகள் நகை, பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

மீனம்:

மனதில் தைரியம் குடியிருக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். விருந்து விழாவில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்