பலவீனமான இனமொன்றின் பலம் வாய்ந்த உயிராயுதங்கள் கரும்புலிகள்!

0
773
Tamil Eelam Black Tigers Remembrance Day July 5

தமிழீழம் என்னும் தணியாத தாகம் கொண்டு தனிநாட்டு கனவுடன் போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் மக்களின் தவிர்க்க முடியாத பலவீனங்களை ஈடுசெய்யும் பலம் வாய்ந்த ஆயுதங்களாக உருவாக்கம் பெற்றவர்கள் கரும்புலிகள். Tamil Eelam Black Tigers Remembrance Day July 5

முன்னர் சீனப் புரட்சியின் போது மாவோ, பாரிய மரபுவழி இராணுவங்களிற்கு எதிராகப் போரிட எவ்வாறு கெரில்லா போராட்ட முறையில் பல்வேறு உத்திகளைச் சூழ்நிலைக்கேற்ப புகுத்தினரோ, அதே போல தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை “கரும்புலிகள்” என்னும் அமைப்பை உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் உருவாக்கி கொண்டனர்.

எண்ணிக்கை, படைபலம், கருவிகள் போன்றவற்றில் எதிரியைவிட அளவில் குறைந்த ஓரு போராட்ட அணி வெற்றியடைவதற்கு வெறும் வீராவேசத்திற்குப் பதிலாக மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட போர்த்திட்டமொன்றையும் அதேவேளை தன்னை இழப்பதன் முலம் இலக்கை வெற்றி கொள்ளும் உத்தியையும் இணைத்தே தலைவர் திரு வே.பிரபாகரன் கரும்புலிகள் என்ற புதிய போராயுதத்தை உருவாக்கினார்.

மனித குலத்தின் உன்னத விழுமியமாக, உயரிய ஈகமாக பிறர்காகத் தன்னை அழித்தல் எனும் தற்கொடைப் பண்பாளர்களைக் கொண்ட படையணியை வரலாற்றில் சமகாலத்திலோ அல்லது முன்னரோ வேறேங்கும் காணமுடியாது.

கட்டம் கட்டமாக வளர்ச்சி கண்ட ஈழப்போரில் , எதிர்க்க முடியாத தடைகளை தமது உயிர் என்னும் ஆயுதம் கொண்டு தகர்த்தெறிந்த கரும்புலிகள் தமிழ் மக்களின் வரலாற்று பக்கங்களில் மறக்கமுடியாதவர்கள் ஆகிப்போனார்கள்.

கரும்புலிகள் எனப்படும் போராட்ட வடிவம் எத்தகைய தாக்கத்தை எதிரியின் தரப்பில் எற்படுத்தியுள்ளது என்பதை கடந்த காலங்களில் உலக நாடுகள் அத்தனையும் வரிந்து கட்டிக்கொண்டு அரங்கேற்றிய சதித்திட்டங்கள் நிறைந்த இன்வழிப்பின் மூலம் காணமுடியும்.

முதல் கரும்புலி தாக்குதல் 1987 ஜூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக மில்லரினால் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது. அன்றில் இருந்து இன்றுவரை 350 வரையான கரும்புலிகள் கடலிலும் தரையிலும் காவியமானார்கள்.

தமது உயிரை துச்சமென மதித்து வெடிகளாகி உடல்கள் சிதறி சொந்த இனத்தின் மானம் காத்த மறவர்களை இந்த நாளில் அஞ்சலிப்போம்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites