இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

0
384
Director Vijay 2nd marriage soon,Director Vijay 2nd marriage,Director Vijay 2nd,Director Vijay,Director
Photo Credit : Google Image

தமிழ் பட உலகில் முன்னணி டைரக்டராக உள்ள ஏ.எல்.விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் 2014 ஆம் ஆண்டு நடிகை அமலாபாலை திருமணம் செய்து, இருவருக்குமிடையிலான கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடங்களில் இவர்கள் பிரிந்து விட்டனர்.(Director Vijay 2nd marriage soon)

இவர், விஜய் நடித்த தலைவா, அஜித்குமார் நடித்த ”கிரீடம்”, விக்ரமின் ”தாண்டவம்”, ”தெய்வத்திருமகள்”, ஆர்யாவை வைத்து ”மதராச பட்டினம்”, ஜெயம் ரவியின் ”வனமகன்” மற்றும் ”சைவம்”, ”இது என்ன மயக்கம்”, ”தேவி”, ”தியா” ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

தற்போது பிரபுதேவா நடிக்கும் ”லட்சுமி”, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ”வாட்ச்மேன்” ஆகிய படங்களை டைரக்ட் செய்து வருகிறார்.

அமலாபாலுடனான பிரிவு குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது.. :-

“நம்பிக்கை, நேர்மை இல்லாது வாழ்வதில் பயன் இல்லை. எங்கள் பிரிவுக்கு இதுவே காரணம். இயல்பாகவே சமுதாயத்தின் மீதும் பெண்கள் மீதும் அதிக அக்கறை கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெண்களின் சுயமரியாதையை பிரதிபலித்தன” என்றார்.

அதன் பின்னர் இருவரும் சுமூகமாக பேசி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்து கொண்டார்கள். அமலாபால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

விஜய்க்கு 2-வது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் விரும்பினர். அதற்கு இத்தனை நாட்களாக மறுத்து வந்த டைரக்டர் விஜய் இப்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், மணப்பெண்ணை தேர்வு செய்யும் படலம் தீவிரமாக நடக்கிறது. விஜய்க்கு விரைவில் 2-வது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்பாக அவர் கைவசம் உள்ள 2 படங்களையும் வேகமாக முடிக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சூர்யாவுடன் இணையும் ஆர்யா : கே.வி.ஆனந்த்தின் புதிய பட அப்டேட்..!

என்னமோ நடக்குது பட இயக்குநருடன் கை கோர்க்கும் அரவிந்த்சாமி..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

துருவ் விக்ரம் ஜோடியான பெங்கால் நடிகை : விரைவில் உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

Tags :-Director Vijay 2nd marriage soon

Our Other Sites News :-

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபரில் இடம்பெறும்