நியூயோர்க் ரைம்ஸ் செய்தி தொடர்பில் சிஐடி விசாரணைகள் ஆரம்பம்!

0
496

அதிபர் தேர்தல் பரப்புரைக்காக, மகிந்த ராஜபக்சவுக்கு 7.6 மில்லியன் டொலரை சீன நிறுவனம் வழங்கியது என்று நியூயோர்க் ரைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. CID Inquiry Begins Investigate New York Times News

இது தொடர்பில் நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, விசாரணை நடத்தக் கோரி, ரஞ்சன் ராமநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறையிட்டிருந்தார்.அதன் அடிப்படையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை துறை முக விவகாரம் தொடர்பான செய்திக்கு உதவிய தமது உள்நாட்டு ஊடகவியலாளர்கள் இருவர், மிரட்டப்பட்டதாக, நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது நாட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்” என்றும் சிறிலங்கா பிரதமர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites