(WorldCup BELJPN BelgiumvJapan Football WorldCupRussia2018 FIFA)
உலக கிண்ண கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3 – 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறியுள்ளது.
உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் – ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.
ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் – ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.
இதனால் ஆட்டத்தின் 48 வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார்.
மேலும், ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜிய கால்பந்தாட்ட அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இறுதியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.
தகவல் மூலம் – தமிழ்மைகேல்
(WorldCup BELJPN BelgiumvJapan Football WorldCupRussia2018 FIFA)
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வர்த்தகரைக் கட்டிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை; பத்தரமுல்லையில் சம்பவம்
- ஆன்மிக நம்பிக்கையால் தற்கொலையா? 11 பேர் மர்ம மரண விவகாரத்தில் புதிய திருப்பம்
- நீரவ் மோடிக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்!
- இரவில் படுக்கும் முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்!
- இத்தாலி எரிமலை வெடிப்பில் 2000 ஆண்டுக்கு முன் சிக்கியவர் எலும்புக்கூடாக மீட்பு
- 13 தடவை பாலியல் துன்புறுத்தல் : கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்
- ஆம்ஸ்டர்டாம் யூத கல்லறை ஸ்வஸ்திகா சின்னங்களால் சிதைக்கப்பட்டது
- காரைநகரில் மாணவனைக் காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த நம்பர் ஒன் டி20 அணி
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
#WorldCup #BELJPN #BelgiumvJapan #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA