சீ.வி.விக்னேஸ்வரனை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து

0
135
personal opinion Mavai Senathirajah shuld Chief Ministerial candidate

(personal opinion Mavai Senathirajah shuld Chief Ministerial candidate)

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.

அது கட்சியின் தீர்மானம் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2013 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை கட்சி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தீர்மானித்திருந்தது.

ஆனால், பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் வேறு ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானித்து சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினார்.

தமிழ் மக்களுக்காகவும், தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காகவும் பல தியாகங்களை செய்திருந்த மாவை சேனாதிராஜா அப்போதும் தனக்கு கிடைக்க வேண்டிய பதவியை தியாகம் செய்து சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக்க இணங்கினார்.

அவ்வாறான தியாகத்தை எல்லோரும் செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும், அடுத்துவரும் வடமாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என நான் கூறியிருந்தது கட்சியின் தீர்மானம் அல்ல.

கட்சியின் பேச்சாளர் என்ற வகையிலும், கட்சியின் நிலைப்பாடுகளை ஓரளவுக்கு புரிந்து கொண்டதன் அடிப்படையிலும் என்னுடைய தனிப்பட்ட கருத்தாகவே அதனை கூறியிருந்தேன்.

அவ்வாறாயின் அடுத்த மாகாண சபை தேர்தலில் யார்? முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை.

அவ்வாறு கட்சி யாரை தீர்மானிக்கிறதோ அதற்கு நாங்கள் இணங்குவோம். மேலும் சீ.வி.விக்னேஷ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன.

முதலமைச்சர் சீ. வி.விக்னேஷ்வரன் வடமாகாண சபையால் செய்ய கூடிய விடயங்களை கூட செய்யவில்லை.

கட்சிக்கு விசுவாசமற்ற முறையில் செயற்பட்டமை, தேர்தல் காலங்களில் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டமை உள்ளிட்ட அவர் பற்றிய பல குற்றச்சாட்டுக்கள் என்னிடம் உள்ளன.

ஆகவே, அவர் அடுத்த முறை மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடாது என்பது என்னுடைய கருத்து என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

(personal opinion Mavai Senathirajah shuld Chief Ministerial candidate)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :