இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை பறிக்கப்படும்… : எச்சரிக்கை விடுத்துள்ள ஐசிசி!

0
659
SLC Membership status reconsidered 2018

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நடத்தப்படாவிட்டால் உறுப்புரிமை பறிக்கப்பட நேரிடும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

டப்லினில் நேற்று நடைபெற்ற ஐசிசியின் வருடாந்த சந்திப்பின் போது, எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் விவகாரமும் பேசப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை கிரிக்கெட் சபையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஷ்தபா, தற்போதைக்கு ஐசிசியின் இலங்கை பிரதிநிதியாக செயற்பட முடியும்.

எனினும் இந்த நிலை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாது எனவும், இன்னும் 6 மாதங்களுக்குள் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் நடத்தப்படாவிட்டால், ஐசிசி வழங்கியுள்ள உறுப்புரிமை தொடர்பில் ஆராயப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

SLC Membership status reconsidered 2018,SLC Membership status reconsidered 2018,SLC Membership status reconsidered 2018