தன்னை கட்டிப்பிடிக்க தயங்கிய நடிகரின் பயத்தை போக்கிய ராய்லட்சுமி..!

0
157
Actress Railakshmi taught hug Arjun,Actress Railakshmi taught hug,Actress Railakshmi taught,Actress Railakshmi,Actress
Photo Credit : Google Image

தன்னை கட்டிப்பிடிக்க தயங்கிய “எக்ஸ் வீடியோஸ்” படத்தில் நடித்த அர்ஜுனின் பயத்தை நடிகை ராய்லட்சுமி போக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.(Actress Railakshmi taught hug Arjun)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

சமீபத்தில் வெளியான ”எக்ஸ் வீடியோஸ்” படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். ”புழல்” படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆர்யா, பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான ”பெங்களூர் நாட்கள்” படத்தில் ராய்லட்சுமியின் காதலராக நடித்தவர்.

மற்றவர்கள் எல்லாம் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள். ஆனால் இவர் வந்தது இதுவரை யாருமே சொல்லியிராத முற்றிலும் வேறு ஒரு காரணத்துக்காக. அது என்னவென்றும் தான் சினிமாவில் நுழைந்தது குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அர்ஜுன்.

அந்த வகையில் அவர் கூறியதாவது.. :-

“எனக்கு இயல்பிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம். என்னுடைய நண்பர்கள் தான் கேமரா முன்னாடி நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்குள் அனுப்பி வைத்தார்கள். அப்போதுதான் விஷ்ணு என்கிற நண்பர் மூலமாக டான்ஸ் மற்றும் நடிக்க தெரிந்த ஆள் வேண்டும் என்பதால் ’புழல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் எம்.பி.ஏ முடித்துவிட்டு பயிற்சிக்காக அப்பல்லோ மருத்துவமனை ரிசப்ஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில அங்கே சூர்யாவின் படப்பிடிப்பு ஒன்று நடைபெற்றது. அதில் பணியாற்றிய ரம்யா மூலமாக எதிர்பாராமல் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ’பெங்களூர் நாட்கள்’ பட வாய்ப்பு கிடைத்தது.

அப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர் நட்பு கிடைக்க, அப்படியே அவர் இயக்கிய ’எக்ஸ் வீடியோஸ்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. பெங்களூர் நாட்கள் படத்தில் நடிக்கவேண்டும் என சொன்னபோது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

நானோ நடிப்புக்கு புதியவன். அதிலும் ராய்லட்சுமியுடன் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இருந்தது. ஆனால் ராய்லட்சுமி தான் எனக்கு உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார்.

அதுமட்டுமல்லாமல் இன்னுமொரு சோதனையாக பாபி சிம்ஹாவுடன் சண்டைபோடும் காட்சியில் நிறைய டேக் வாங்கி சொதப்பினேன். இப்போது ’எக்ஸ் வீடியோஸ்’ படத்தை பார்த்துவிட்டு, புதிய ஆள் மாதிரி தெரியவில்லை. ரொம்பவும் இயல்பாக நடிக்கிறாய் என பலர் பாராட்டி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என அர்ஜுன் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

பாம்பு மனிதர்கள்.. ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள்.. : குழந்தைகளுக்கான ’அனுமனும் மயில்ராவணனும்’ திரைப்படம்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Actress Railakshmi taught hug Arjun

Our Other Sites News :-

லிபியாவிலிருந்து ஐரோப்பா சென்ற 103 அகதிகள் மரணம் : ஐ.நா. அனுதாபம்