16 பேருக்கும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார் மஹிந்த

0
168
mahinda rajapaksa orders 16 members

அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 16 பேர் கொண்ட குழுவிற்கு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களில் பங்கேற்க முடியாது மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு நேற்று முதல் தடவையாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் குழுக் கூட்டத்தில் பங்கேற்றது.

இதனையடுத்து, ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,

54 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த ஒன்றிணைந்த எதிரணி தற்போது 70 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, நாடாளுமன்றில் பெரும்பான்மையான எதிர்கட்சி உறுப்பினர்களை கொண்ட தங்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரவுள்ளோம்.

நாடாளுமன்றில் ஒன்றிணைந்த எதிர்கட்சியை அங்கத்துவப்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mahinda rajapaksa orders 16 members,mahinda rajapaksa orders 16 members,mahinda rajapaksa orders 16 members,