தலைவர் பதவியில் தொடர்ந்தும் நீடிக்கிறார் லக்மால்…

0
663
Suranga lakmal lead Sri Lanka vs South Africa 2018

தென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைராக சுராங்க லக்மால் தொடர்ந்து செயற்படுவார் என எதிர்பார்க்கப்டுகின்றது.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகக்குழுவுக்கு இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே.தீவுகளுக்கு எதிராக சென் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டது.

எனினும் பந்தை சேதப்படுத்தியதை ஏற்றுக்கொள்ளாத இலங்கை அணி வீரர்கள், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள், இரண்டு மணி்த்தியாலம் வரை விளையாடவில்லை.

பின்னர் அடுத்த நாள் ஆதாரங்களை முன்வைத்த ஐசிசி சந்திமால் உட்பட ஹதுருசிங்க மற்றும் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு தடை விதித்தது. இதனால் மே.தீவுகள் அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் சந்திமால் விளையாடவில்லை.

அத்துடன் ஐசிசியின் மூன்றாம் நிலை குற்றம் புரிந்தமைக்காக, சந்திமாலுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவதிக்க முடியும் என்ற நிலையில், தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான தலைவர் பதவி லக்மாலுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மே.தீவுகளுக்கெதிரான பார்படோஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை லக்மால் தலைமையிலான இலங்கை அணி வெற்றிக்கொண்டது. அத்துடன் பார்படோஸில் டெஸ்ட் தொடரை வென்ற முதலாவது தலைவர் என்ற பெருமையையும் லக்மால் பெற்றுள்ளார். இதனால் அணித்தலைவர் பதவியை லக்மால் ஏற்பார் எனவும், சந்திமால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் உபாதையிலிருந்து திமுத் கருணாரத்ன மற்றும் மே.தீவுகளிலிருந்து நாடு திரும்பிய மெத்தியூஸ் ஆகியோர் தென்னாபிரிக்க தொடரில் விளையாடுவர் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Suranga lakmal lead Sri Lanka vs South Africa 2018,Suranga lakmal lead Sri Lanka vs South Africa 2018,Suranga lakmal lead Sri Lanka vs South Africa 2018