அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த நம்பர் ஒன் டி20 அணி

0
757
Australia beat Pakistan T20 2018 Zimbabwe

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றைய போட்டியில் சர்வதேச டி20 தரப்படுத்தலில் முதலிடத்தை வகிக்கும் பாகிஸ்தான் அணியை, அவுஸ்திரேலிய அணி பந்தாடியுள்ளது.

சிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் டி20 போட்டி நேற்று ஆரம்பமாகியது. முதல் போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இன்று அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.

இங்கிலாந்து அணியிடம் 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 என தொடர்ச்சியாக தோல்வியை தழுவிவந்த ஆஸி அணியின் பந்து வீச்சு போட்டியை பிரகாசப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தீர்மானித்த பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதல் மிகச்சிறந்த பந்து வீச்சு பாணியை வெளிக்காட்டியது.

முக்கியமாக ஸ்டென்லேக் மற்றும் என்ரு டை பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களை தினறடித்தனர்.

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மொஹமட் ஹபீஸ் டக்கவுட், பர்க்கர் ஷமான் 6 ஓட்டங்கள், ஹுசைன் டலாத் 10 ஓட்டங்கள் மற்றும் அணித்தலைவர் சப்ராஷ் அஹமட் 4 ஓட்டங்கள் என அனைவரையும் தனது வேகத்தால் ஸ்டென்லேக் அடுத்தடுத்து வெளியேற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய சொயிப் மலி் துரதிஷ்டவசமாக 13 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். எனினும் அடுத்ததாக களமிறங்கிய சதாப் கான் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடினர்.

சதாப் கான் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கலாக 29 ஓட்டங்களையும், பஹீம் அஸ்ரப் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சதாப் கானை என்ரு டை வெளியேற்ற, பஹீம் அஸ்ரப்பை ரிச்சட்சன் வெளியேற்றினார்.

மீண்டும் அடுத்தடுத்து விக்கட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 116 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீ்ச்சில் ஸ்டென்லேக் 4 விக்கட்டுகளையும், என்ரு டை 3 விக்கட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினார்.

இந்நிலையில் பெறக்கூடிய வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கினை அடைந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷோர்ட் மாத்திரம் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஆரோன் பின்ச் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை தினறடித்தார்.

இவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும், டிராவிஸ் ஹெட் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, அவுஸ்திரேலிய அணி வெறும் 10.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய அணியின் பில்லி ஸ்டென்லேக் தெரிவுசெய்யப்பட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Australia beat Pakistan T20 2018 Zimbabwe,Australia beat Pakistan T20 2018 Zimbabwe,Australia beat Pakistan T20 2018 Zimbabwe