TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Head Line வடக்கின் பிரச்சினைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் – ஜனாதிபதியின் வருகைக்கு முன்னரே கடிதம் வரைந்துள்ளார்

வடக்கின் பிரச்சினைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் – ஜனாதிபதியின் வருகைக்கு முன்னரே கடிதம் வரைந்துள்ளார்

0
445
tamilnews maithree jaffna visit CV wickneswaran written letter

(tamilnews maithree jaffna visit CV wickneswaran written letter)

முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய யாழ் வருகையை முன்னிட்டு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மக்கள் சேவையின் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் நடக்கவிருப்பதை வரவேற்று சில பொதுவான பிரச்சினைகள் சம்பந்தமாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கில் குற்றவியல் நடவடிக்கைகள் திடீர் என்று அதிகரித்துள்ளன என்றும் வன்முறையையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

அத்துடன் கடமையில் இருக்கும் சிரேஷ்ட உப பொலிஸ் அதிபர் ஒருவரையோ அல்லது இளைப்பாறிய சிரேஷ்ட உப பொலிஸ் அதிபர் ஒருவரினது தலைமையிலோ வடமாகாண சபையின் அலுவலர்களையும் உள்ளடக்கி மேற்படி வன்முறை, போதைப் பொருள் விநியோகம், அவற்றின் பாவனை மற்றும் மண் கடத்தல் போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்ந்து அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உடனடி அறிக்கை ஒன்றைப் பெறுமாறு கேட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்த போது கைதி ஆனந்த சுதாகரனுக்கு மன்னிப்பு வழங்க முடியாது இருப்பதைப்பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

அப்படியானால் அவரின் குழந்தைகள் வாழும் பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைக்கு கைதியை மாற்றினால் தாய் இல்லாத குழந்தைகள் தமது தந்தையைச் சென்று கண்டுவர முடியும் என்று முதலமைச்சரால் கூறப்பட்டதை வரவேற்று அதற்குரிய நடவடிக்கையை உடனே எடுப்பதாக ஜனாதிபதி உறுதி மொழி அளித்திருந்தார்.

அதனை நினைவுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கோரியுள்ளார்.

அதேவேளை, முதலமைச்சர் நிதியத்தின் நியதிச்சட்ட வரைவு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை என்றும் 5 வருடங்களாக அதுபற்றிக் கோரியும் இன்னமும் தாமதிப்பது எமது வடமாகாண பொருளாதார விருத்தியை அரசாங்கமானது விரும்பவில்லையோ என்று எண்ண வைக்கின்றது என்பதையும் ஜனாதிபதிக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேறுபல கூட்டங்கள் இருப்பினும் அவற்றைத் தவணை போட்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மக்கள் சேவையின் போது பிரசன்னமாய் இருப்பதற்கும் அந்த கடிததத்தில் இணங்கம் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின்
ஊடகப்பிரிவு

(tamilnews maithree jaffna visit CV wickneswaran written letter)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites