பல தமிழ் பெண்களின் வாழ்வை சீரழித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு

0
151

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில்  அரச மற்றும் தனியார் நிதிநிறுவனங்கள் வழங்கியுள்ள சுமார் 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நுண்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Micro Finance Write-off

இராஜாங்க நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன இத்தகவலை ஆங்கிய வார இதழொன்றுக்கு தெரிவித்துள்ளார். நுண்கடனில் சிக்கித்தவிக்கும் மக்களின் கஷ்டத்தை குறைக்கும் நோக்கிலேயே இம்முடிவை அரசு எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செயல்திட்டமானது அரச நிறுவனங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுமென எரான் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் நுண்கடன் நிறுவனங்களின் ஒழுங்குபடுத்தல் அமைப்பென்ற வகையில் மத்திய வங்கியும் இதில் பங்கு வகிக்குமெனவும், இது தொடர்பான விபரங்கள் மற்றும் நடைமுறைகள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதி வெளியிடுமென இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 1 இலட்சம் ரூபா அல்லது அதற்கு குறைவான கடன் தொகைகளுக்கு, இம் மீள் செலுத்தும் திட்டம் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.  மூன்று மாகாணங்களில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பெண் குடும்பத்தலைவிகளைக் கொண்ட குடும்பங்களுக்கும் இச்சலுகை வழங்கப்படவுள்ளது.

இதற்காக திறைசேரியால் சுமார் 1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்குனர்கள் , யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரங்களை கட்டியெழுப்பும்  நிலையில் தவறான கடன் வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நுண்கடன் விவகாரம் சமீப காலமாக பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதிகளிலேயே இந்த நுண்கடன் விவகாரம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது.

ஒழுங்கான முகாமைத்துவமின்றி இயங்கும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க எடுக்கப்படுமெனவும்,  சிறு நுண்கடன் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள பெண்களின் கடனுக்கான வட்டியை அரசு பொறுப்பேற்க முடிவுசெய்திருப்பதகாவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.