ரெஜினா படுகொலைக்கு எதிரான அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்

0
399
Northern Province Governor comments Regina assassination

புங்குடுதீவு மாணவி வித்தியா, சுழிபுரத்தில் ரெஜினா போன்றவர்களின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், மதத் தலைவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அழைப்பு விடுத்துள்ளார். (Northern Province Governor comments Regina assassination)

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் 180 ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு விழா நிகழ்வும் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்குரே கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், வீண் உணர்ச்சி பேச்சுக்கள், கிளர்ச்சிகளினால் இவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது.

இவை ஏன் நடைபெறுகின்றன என்பதன் பின்னணிகளை நன்கு விசாரித்து அறிந்து கொள்வது அவசியமானது. இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டிருக்கின்ற போதும் முழு நாட்டினையும் சோகத்தில் ஆற்றிய சம்பவம் றெஜினாவின் படுகொலை என நான் நினைக்கின்றேன்.

பெரியவர்களின் சண்டையில் பழியை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றும் அறியாத சின்னக்குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றது. இது மிகவும் கொடூரமான சம்பவம். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே சுட்டிக்காட்டினார்.

tags :- Northern Province Governor comments Regina assassination

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites