எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் கவிழும்: தங்க தமிழ்ச்செல்வன்

0
107
Dinakarans supporter ThangadThamilSeelan verdict favor case

Dinakarans supporter ThangadThamilSeelan verdict favor case

17 எம்எல்ஏக்கள் வழக்கில் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்து விரைவில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழும் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன், இப்படிப்பட்ட தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் இந்த தீர்ப்பு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டு வாங்கப்பட்ட தீர்ப்பு என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பை விமர்சனம் செய்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க தயார் என்று தான் கூறிய கருத்தில் பின்வாங்கப் போவதில்லை என்றார்.

மக்களுக்கு நீதித்துறையின் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது என்று கூறிய அவர், தினகரன் அணியில் தங்களுக்குள் பிரிவில்லை என்று கூறினார்.

மேலும் 17 எம்எல்ஏக்கள் வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விரைவில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழும் என்றும் தங்கத் தமிழ்ச் செல்வன் கூறினார்.

Dinakarans supporter ThangadThamilSeelan verdict favor case

tags;-accident aeroplane black box return

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :