கோத்தா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை முதலில் அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும்

0
316
US must first decide whether Gota contest presidential election

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே பயப்படாத நாம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பயப்படுவோமா என்று அமைச்சர் பி. ஹரிசன் கேள்வி எழுப்பியுள்ளார். (US must first decide whether Gota contest presidential election)

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்துக்கு “கோத்தா பயம்” பீடித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் தெரிவிக்கலாம். எனினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நாம் அஞ்சப் போவதில்லை.

காரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னள் ஜனாதிபதிக்கு பயப்படாது தேர்தல‍ை எதிர்கொண்டு வெற்றி பெற்றோம். ஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கே பயப்படாத நாம் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பயப்படுவோமா.

மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து முதலில் அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

tags :- US must first decide whether Gota contest presidential election

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites