அம்பாள்குளம் சிறுத்தை விவகாரம் – பத்து பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
435
Kilinochchi Ampalakulam leopard murders taken Magistrate Court

(Kilinochchi Ampalakulam attacked ten people leopard remand extended)

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை வனஜீவராசிகள் திணைக்கள் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயப்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட சிறுத்தை கிராம மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களம், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

அந்த வகையில் கடந்த 24 ஆம், 25 ஆம் திகதிகளில் சந்தேக நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட நான்கு பேர் சரணடைந்தார்கள்.

அவர்களை இன்றைய (29) தினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே இன்றைய தினம் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேலும் நான்கு பேர் சரணடைந்திருந்தனர்.

சரணடைந்தவர்களுடன் சேர்த்து பத்து சந்தேக நபர்களையும் பிணையில் விடுதலை செய்வதற்கு பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தன் விளைவாக சந்தேகநபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதி மன்றம் இன்று உத்தரவிட்டது.

(Kilinochchi Ampalakulam attacked ten people leopard remand extended)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites