ஹைலண்ஸ் கல்லூரி காணி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – இ.தொ.கா பெற்றுக்கொடுத்த காணி வேறு – வழக்கு தொடர்ப்பட்ட காணி வேறு

0
172
tamilnews cpc minister rameshwaran claiming hill country politics

(tamilnews cpc minister rameshwaran claiming hill country politics)

ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரிக்கு 10 ஏக்கர் காணியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது அதிகாரத்தாலும், சக்தியாலும் ஜனாதிபதியின் உதவியோடு பெற்றுக்கொடுத்தது.

இன்று அந்த காணி தொடர்பில் பலர் அரசியல் பேசுகின்றனர். பெற்றுக்கொடுத்த காணியை நீதிமன்றத்தால் பிடிங்கி விட்டார்கள் என ஒரு பத்திரிகையின் ஊடாக, செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இ.தொ.கா இந்த கல்லூரிக்கு பெற்றுக்கொடுத்த காணி வேறு, நீதிமன்றத்தால் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்ட காணி வேறு என்பதை உணர்ந்து உண்மை தெரிந்து எழுத வேண்டும் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஹட்டன் கல்வி வலயத்தின் 65 பாடசாலைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை பயன்பாட்டுக்கு பகிர்ந்தளிக்கும் வைபம் இன்று ஹட்டனில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாகாண அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில், மலையகத்தின் இருப்பும் எதிர்காலமும் கல்வியின் வளர்ச்சியில் தங்கியுள்ளது.

தோட்ட தொழிலில் இருந்து விடுப்பட்டு படிப்படியாக முன்னேற்றமடைந்து மாற்று தொழிலுக்கு தங்களை தயார் செய்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் மலையகத்தில் கல்வி முன்னேற்றத்தை இ.தொ.கா மேம்படுத்தி வருகின்றது.

சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இ.தொ.கா ஊடாக பல்வேறு முன்னேற்றகரமான பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று மலையகத்தின் கல்வி நிலையில் மத்திய மாகாண மட்டத்தில் ஹட்டன் கல்வி வலயம் சிறந்த பெறுபேறுகளை பெற்று மூன்றாவது இடத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இது அணைவரும் பெருமைக்கொள்ள கூடிய ஒரு விடயமாகும். ஏனைய பாடசாலைகளை பார்க்கும் போது கல்வி மட்டத்தில் குறைவடைந்திருந்தாலும், ஹட்டன் கல்வி வலயத்தில் ஹைலண்ஸ் கல்லூரியின் கல்வி மட்டம் உயர்வடைந்து உள்ளது.

ஆகையால் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் வளத்தை பெருக்கும் வகையில் அக்கல்லூரிக்கு 10 ஏக்கர் காணியை அரசியல் பலம் அல்லாமல் இ.தொ.கா ஜனாதிபதியின் உதவியோடு அதன் சக்தியால் இன்று பெற்றுக்கொடுத்துள்ளது.
இதையும் கூட சிலர் தவறான கருத்துகளை முன்வைத்து ஒரு பத்திரிகையின் ஊடாக குறை கூறி வருகின்றனர்.

கல்வி முன்னேற்றம் நமது சமூகத்தின் காலத்தின் கட்டாயமாகும்.

கல்வியில் முன்னேறும் மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை வாழ்த்தி பேசாது. தூற்றி பேசும் சமூகமும் நம்மத்தியில் தான் இருக்கின்றது.

இ.தொ.கா பாடசாலைகளில் அரசியல் செய்வது இல்லை என்பதை உணர்த்திய அவர் 60 ற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களை கோடி கணக்கான ரூபாய்களை செலவு செய்து வழங்கி வரும் நிலையில் சிலர் இதையும் தூற்றி பேசுகின்றனர்.

மாகாண அமைச்சுக்கு பணம் இல்லை என நாகூசாமல் சிலர் தெரிவிக்கின்றனர். பணம் இல்லாமல் எந்த வகையில் கோடிக்கணக்கில் செலவு செய்து பொருட்களை வழங்கி வருகின்றோம்.

அது எவ்வாறு என சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறு உண்மையை உணராத சிலர் நமது சமூகத்தில் அரசியலில் ஈடுப்பட்டு எதிர்கால கல்வி முன்னேற்றத்தை சரிவடைய செய்ய நினைக்கின்றார்கள்.

கடந்த மூன்றரை வருடத்தில் மத்திய மாகாணத்தில் மத்திய அமைச்சு செய்திருக்கும் வேலைப்பாடுகளும், மாகாண அமைச்சு செய்திருக்கும் வேலைப்பாடுகளையும் வகுத்து பாருங்கள்.

அப்போது தெரியும் மத்திய மாகாண அமைச்சில் 8 துறைளை கொண்ட எனது அமைச்சின் ஊடாக பெருந்தோட்டங்களுக்கு எவ்வாறாக சேவைகள் சென்றுள்ளது என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியும்.

எம்மிடம் சக்தியும் ஜனாதிபதியின் உதவியும் எமது தேசிய தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பலமும் ஒருங்கே சேர்ந்துள்ளது.

தைரியமாக காலத்திற்கேற்ப சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அபிவிருத்தி பணிகளை செய்து வருவோம்.

பாடசாலைக்கு நாளை எது வேண்டுமானாலும் கேளுங்கள். அதை பெற்றுத்தரவும் எம்மிடம் பணம் இருக்கின்றது என அடித்துக் கூறிய அமைச்சர் மத்திய மாகாணத்தில் மேலும் 2437 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க தமக்கே சக்தி இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(tamilnews cpc minister rameshwaran claiming hill country politics)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites