தெஹிவளையில் அரைகுறை கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த இருவர் மரணம்

0
111
Two people died building constructed Dehiwala Dharmapala Mawatha

(Two people died building constructed Dehiwala Dharmapala Mawatha)

தெஹிவளை ஸ்ரீமத் அநகாரிக தர்மபால மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே வீழ்ந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தத்தில் 39 மற்றும் 40 வயதான இருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தில் மின்சார இணைப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் கீழே தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Two people died building constructed Dehiwala Dharmapala Mawatha)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites